ஷா ஆலம், மே 3- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மாநில அரசு இலவச பரிசோதனை இயக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது.அடுத்த பரிசோதனை இயக்கத்திற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பச்சை விளக்கு கிடைத்தவுடன் அவ்வியக்கம் தொடங்கப்படும் என்றும் செல்கேர் கிளினிக் நிர்வாகி முகமது நூர் முகமது நாசீர் கூறினார்.
இந்த வாரத்தில் கூட இந்த இயக்கத்தை தொடக்கி விடலாம். எப்போது? எந்த இடத்தில்? இந்த இந்த இயக்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர்.
கடந்த வாரம் ஆக்க கடைசியாக காஜாங், சுங்கை லோங்கில் இந்த இயக்கம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதோடு அவசியம் இருந்தாலன்றி வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ECONOMY
இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் விரைவில் தொடங்கும்
3 மே 2021, 4:08 AM


