ரவாங், ஏப் 30- நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரவாங் தொகுதியிலுள்ள 550 முஸ்லீம்களுக்கு ஜோம் ஷோப்பிங் எனப்படும் பொருள் வாங்குவதற்கான இலவச பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த பற்றுச் சீட்டு வழங்கும் திட்டத்தில் தனித்து வாழும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
இத்தரப்பினர் மீது நாங்கள் பரிவும் அக்கறையும் கொண்டுள்ளோம் இந்த உதவி அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்பதோடு நோன்பு பெருநாள் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தும் என நம்புகிறோம் என அவர் சொன்னார்.
இந்த பற்றுச் சீட்டை பெற்றவர்கள் புக்கிட் ரவாங் ஜெயா என்.எஸ்.கே. பேரங்காடியில் அதனைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


