PENDIDIKAN

சிலாங்கூரிலுள்ள 79 பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகின்றன

26 ஏப்ரல் 2021, 7:30 AM
சிலாங்கூரிலுள்ள 79 பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகின்றன

ஷா ஆலம், ஏப் 26- கோவிட்-19 நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து  சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 79 பள்ளிகள் இரு தினங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதை மாநில கல்வி இலாகா உறுதிப்படுத்தியுள்ளது.

உலு லங்காட் மாவட்டத்தில் 19 பள்ளிகளும் பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில் 18 பள்ளிகளும் கிள்ளான் மாவட்டத்தில் 15 பள்ளிகளும் இன்று தெடாங்கி இரு தினங்களுக்கு மூடப்படுவதாக மாநில கல்வி இலாகா கூறியது.

இது தவிர, கோம்பாக் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் தலா ஒன்பது பள்ளிகளும் உலு சிலாங்கூரில் 5 பள்ளிகளும் கோல லங்காட் மற்றும் சிப்பாங்கில் தலா இரு பள்ளிகளும் மூடப்படுவதாக அது மேலும் தெரிவித்தது.

இம்மாதம் 25ஆம் தேதி நோய்ப் பரவல் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளிகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரு பள்ளிகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதை கோல லங்காட் மாவட்ட அதிகாரி  முகமது ஜூஸ்னி உறுதிப்படுத்தினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த வாரம் பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள 19 பள்ளிகள் மூடப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.