ஷா ஆலம், ஏப் 23- நோன்பு பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் 1,000 வெள்ளி சிறப்பு உதவி நிதியாக வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்கள் வழங்கி வரும் பங்களிப்பை அங்கீரிக்கும்
வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாகா அவர் கூறினார். மத்திய அரசினால் சம்பளம் வழங்கப்பட்டு மாநில அரசில் வேலை செய்து வருவோர் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு உதவித் தொகை வரும் மே மாதம் 19ஆம் வழங்கப்படும் எனக் கூறிய அவர்,
இந்நோக்கத்திற்காக மாநில அரசு 2 கோடியே 26 லட்சத்து 75 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.


