அம்பாங், ஏப் 23- சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியத்தின் வாயிலாக செய்யப்படும் வர்த்தக கடனுதவிக்கான விண்ணங்கள் ஐந்து வேலை நாட்களில் அங்கீகரிக்கப்படும்
கடனுதவிக்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த 14 நாள் கால அவகாசம் மிக அதிகமானது எனபதோடு நிதியுதவி தேவைப்படுவோருக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும் என்று யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுப்பாராடி முகமது நோர் கூறினார்.
இது குறித்து அதிகாரிகளோடு நான் விவாதித்துள்ளதோடு விண்ணப்பங்களை ஐந்து நாட்களில் பரிசீலித்து கடனுதவி அங்கீரிக்கப்படுவதை உறுதி செய்வேன் என சவால் விடுத்துள்ளேன் என்றார் அவர்.
கம்போங் பண்டான் டாலாமில் நடைபெற்ற இஃப்தார் ஹிஜ்ரா சிலாங்கூர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா அஜிஸ், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக மகளிருக்கு உதவும் வகையில் கடனுதவி விண்ணப்பங்களை ஹிஜிரா சிலாங்கூர் எளிதாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நோய்த் தொற்று பரவல் காரணமாக பல பெண்கள் வேலை இழந்துள்ளனர். வருமானம் ஈட்டுவதற்கு அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.


