NATIONAL

கோவிட்-19 பரவலின் எதிரொலி- சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூடப்பட்டன

20 ஏப்ரல் 2021, 3:06 AM
கோவிட்-19 பரவலின் எதிரொலி- சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூடப்பட்டன

செலாயாங், ஏப் 20-  கோவிட்-10 நோய்த் தொற்று பரவல் அபாயம் காரணமாக சிலாங்கூரில் 19 பள்ளிகள் இன்று தொடங்கி மூடப்படுகின்றன.

பள்ளிகள் சம்பந்தப்பட்ட நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாநில அரசு கல்வியமைச்சுக்கு இந்த பரிந்துரையை வழங்கியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த ஆகக் கடைசி நிலவரம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய மாநில பாதுகாப்பு மன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

புனித ரமலான் மாதத்தையொட்டி மேற்கொள்ளும் கித்தா  சிலாங்கூர் பயணத்தின் ஒரு பகுதியாக செலாயாங் வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பள்ளிகளை உட்படுத்திய கோவிட்- 19 நோய்த் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 19 பள்ளிகளை உடனடியாக மூட வேண்டிய அவசியம் குறித்து கல்வியமைச்சுக்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம் என்றார் அவர்.

முன்னதாக, 19 பள்ளிகள் மூடப்படுவது தொடர்பான கல்வியமைச்சின் சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

 

மூடப்பட்ட பள்ளிகள் வருமாறு-

  1. Sekolah Menengah Kebangsaan (SMK) Bukit Jelutong
  2. SMK Bandar Sri Damansara 2
  3. SMK Damansara Jaya
  4. SMK Seksyen 7
  5. SMK USJ 23
  6. SMK Puchong
  7. SMK Puchong Utama 1
  8. SMK Seksyen 4 Bandar Kinrara
  9. SMK Bandar Puncak Jalil
  10. SMK Seksyen 20
  11. SMK Puchong Perdana
  12. Sekolah Kebangsaan (SK) Puchong Perdana
  13. SK Bandar Baru Sri Damansara 2
  14. SK Bukit Kuchai
  15. SK Bandar Sri Damansara 3
  16. SK Bukit Jelutong
  17. SK USJ 20
  18. Sekolah Agama Menengah Bestari Subang
  19. Sekolah Jenis Kebangsaan Cina (SJKC) Yuk Chai

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.