MEDIA STATEMENT

ஆறு பூப்பந்து விளையாட்டாளர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி

18 ஏப்ரல் 2021, 10:31 AM
ஆறு பூப்பந்து விளையாட்டாளர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி

கோலாலம்பூர், ஏப் 18-  மலேசிய பேட்மிண்டன் அகாடமியில் உள்ள ஆறு பூப்பந்து விளையாட்டாளர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளதை மலேசிய பூப்பந்து சங்கம் (பி.ஏ.எம்.) உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த அறுவரும் நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்கவில்லை என்பதோடு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் கூறியது.

இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம், தேசிய விளையாட்டு கழகம் ஆகிய அமைப்புகள் வழங்கிய ஆலோசனையின் பேரில் புக்கிட் கியாராவிலுள்ள அந்த அகாடமியில் தங்கியிருக்கும் விளையாட்டாளர்கள், பயிற்றுநர்கள், அதிகாரிகள் உள்பட 91 பேர் மீது கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அச்சோதனையில் யாருக்கும் நோய்த் தொற்றுக்கான அறிகுறி தென்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்று அது மேலும் தெரிவித்தது.

மலேசிய விளையாட்டு அகடாமி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வேளையில் தனிமைப்படுத்துதலை மையமாக கொண்ட பயிற்சி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன,

பள்ளி நடவடிக்கைகள் யாவும் இன்னும் சில நாட்களுக்கு இயங்கலை வாயிலாக மேற்கொள்ளப்படும் என்று பூப்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.