ஷா ஆலம், ஏப் 9- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மக்களின் கருத்தறியும் நிகழ்வு கடுமையான எஸ்.ஒ.பி. நடத்தப்படும்.மண்டபத்தின் பரப்பளவை பொறுத்து வருகையாளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்பதோடு அவர்கள் கூடல் இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படும் என்று மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
இந்த கருத்தறியும் நிகழ்வில் நிர்வாக நடைமுறைகளை பின்பற்றப்படும். அதேசமயம், இந்த நிகழ்வில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையும் வரையறுக்கப்படும் என அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
மாநகர் மன்ற தலைமையக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 2021-2035 ஆண்டிற்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு தொடர்பான கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பில் மாநகர் மன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள் மீது சம்பந்தப்பட்ட தனி நபர்கள் அல்லது அரசு சாரா அமைப்புகளின் கருத்துகளை கேட்டறிவதற்காக மட்டும் பிரத்தியேகமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக அது கூறியது.
ECONOMY
கடுமையான எஸ்.ஓ.பி. நிபந்தனைகளுடன மக்கள் கருத்தறியும் நிகழ்வு - எம்.பி.எஸ்.ஏ. அறிவிப்பு
9 ஏப்ரல் 2021, 8:30 AM


