ஷா ஆலம், ஏப் 2- அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பு கட்டண விவகாரம் தொடர்பில் எழும் பிரச்னைகளை களைவதற்கு விரிவான அணுகுமுறையை சிலாங்கூர் அரசு ஆராய்ந்து வருகிறது.அதி முக்கியமான மற்றும் பல தரப்பினரை உள்ளடக்கிய விவகாரமாக இது உள்ளதால் இதற்கு உடனடியாக தீர்வு காணப்படுவது அவசியம் என்று வீடமைப்பு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
பல இடங்களில் குடியிருப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பராமரிப்பு கட்டணம் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு போதுமானதாக இல்லை. உதாரணத்திற்கு, 100 வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 40 விழுக்காட்டினர் மட்டுமே பராமரிப்பு கட்டணம் செலுத்துகின்றனர் என்றார் அவர்.
ஆகவே, இவ்விவகாரத்திற்கு தீர்வு காண விரிவான அணுகுமுறை தேவைப்படுவதாக கூறிய அவர், அனைத்து தரப்பினரின் புரிந்துணர்வின் வாயிலாகவே இது சாத்தியமாகும் என்றார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மீதான கருத்தரங்கை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் சார்பில் 120 கூட்டு நிர்வாக வாரிய பிரதிநிதிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
PBT
அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பு கட்டண விவகாரம் மீது சிலாங்கூர் ஆய்வு
2 ஏப்ரல் 2021, 3:08 AM


