ஷா ஆலம், மார்ச் 11- கோத்தா டாமன்சாரா சட்டமன்ற தொகுதியில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் தொகுதி உறுப்பினர் ஷாதிர் மன்சூர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.அந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெள்ளத் தடுப்பு திட்டம் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
இத்திட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் தமது தரப்பு வட்டார மக்களுடன் பேச்சு நடத்தி வருவதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் அல்லது ஆண்டு மத்தியில் இத்திட்டம் தொடரப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தினால் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக கூறிய அவர், அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் சிலாங்கூர் கூ வீடுகளும் வழங்கப்படும் என்றார்.
கடுமையான வெள்ளத்தின் போது பெலெப்பாஸ் ஆற்று நீர் பெருக்கெடுத்து கம்போங் மிலாயு சுபாங் குடியிருப்பு பகுதியில் நுழைந்து விடுவதாக அவர் குறிப்பிட்டார்.
ALAM SEKITAR & CUACA
கோத்தா டாமன்சாராவில் திடீர் வெள்ளப் பிரச்னையை தீர்க்க சிறப்புத் திட்டம்
11 மார்ச் 2021, 5:28 AM


