ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில்  ஜனவரி முதல் 994 திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் பதிவு

27 பிப்ரவரி 2021, 4:21 AM
சிலாங்கூரில்  ஜனவரி முதல் 994 திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், பிப் 27- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் நேற்று வரை 8,140 ஹெக்டர் நிலப்பரப்பை உட்படுத்திய 994 திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

விவசாய நிலங்களில் 75 தீச்சம்பவங்களும், காடுகள் சம்பந்தப்பட்ட 230 தீச்சம்பவங்களும், புதர்கள் சம்பந்தப்பட்ட 464 சம்பங்களும் சட்டவிரோத குப்பைகள் கொட்டும் இடங்களில் 225 சம்பவங்களும பதிவானதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோர்ஹசாம் காமிஸ் கூறினார்.

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக சில இடங்களில் குறிப்பாக் காடுகளின் ஓரங்களில் ஒரே இடத்தில் மூன்று அல்லது நான்கு முறை தீ தொடர்ந்து ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென் கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, சைபர் ஜெயாவிலுள் இலிட் நெடுஞ்சாலை அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதி, ஜாலான் நெனாஸ் மேரு ஆகிய இடங்களில் கடந்த செவ்வாய்  மற்றும் புதன் கிழமைகளில் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை அணைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

தென் கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஓரங்களில் தீ ஏற்பட்டதற்கு அனாமதேய நபர்களின் கீழுறுப்பு செயலே காரணம் எனக் கூறிய அவர், இதன் தொடர்பில் தமது தரப்பு போலீசில் புகார் செய்யவுள்ளதாக சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.