PBT

பிப். 28ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவீர்- பெ.ஜெயா மாநகர் மன்றம் நினைவுறுத்து

25 பிப்ரவரி 2021, 11:02 AM
பிப். 28ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவீர்- பெ.ஜெயா மாநகர் மன்றம் நினைவுறுத்து

ஷா ஆலம், பிப் 25- இம்மாதம் 28ஆம்  தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்தும்படி பெட்டாலிங் ஜெயா வட்டாரத்திலுள்ள சொத்துடைமையாளர்கள் வலியுறுத்தப் படுகின்றனர்.

அபராதம்  விதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக மதிப்பீட்டு வரியை மாநகர் மன்ற முகப்பிடங்களில் அல்லது இணையம் வாயிலாக செலுத்திவிடும்படி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

வரி செலுத்தும் பணியை எளிதாக்குவதற்காக மாநகர் மன்ற தலைமையகத்திலுள்ள முகப்பிடங்கள் வார இறுதி நாட்களிலும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00  மணி வரை  திறந்திருக்கும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்னும் அமலில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ecukai@mbbj எனும் செயலி வாயிலாகவும் பொது மக்கள் தங்கள் வரியைச் செலுத்தலாம். இந்த செயலியை Google Play  மற்றும் App Store வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.

மேல் விபரங்களுக்கு 03-79563544  என்ற எண்களில் அல்லது www.mbpj.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.