PBT

ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்

7 பிப்ரவரி 2021, 11:19 AM
ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்

ஷா ஆலம், பிப் 7- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 2021-2022ஆம் ஆண்டு தவணைக்கான உறுப்பினர்கள் நியமனம் இம்மாதம் 5ஆம் தேதி இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. டேவான் பெர்பண்டாரானில்  நடைபெற்றது.

மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஹரிஸ் காசிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  மாநகர் மன்றத்தின் 24  உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதோடு இரகசிய காப்பு பத்திரத்திலும் கையெழுத்திட்டனர்.

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக இந்த பதவியேற்பு நிகழ்வில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கேற்ப கடும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கூடல் இடைவெளியைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவுதல் உடல் உஷ்ணத்தைச் சோதித்தல் போன்ற நடைமுறைகளை பின்பற்றினர்.

இந்த ஈராண்டுத் தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உறுப்பினர்களில் 6 பேர் இந்தியர்களாவர். ஜசெகவை பிரதிநிதித்து வீ. பாப்பாராய்டு, பி.யுகராஜா, எஸ்.காந்திமதி ஆகியோரும் பிகேஆர்  கட்சியின் சார்பில் எஸ்.சரவணன், எஸ். குமரவேல், சைரா பானு ஆகியோரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எஸ்.குமரவேல் இப்பதவிக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.