EVENT

சிலாங்கூர் சுல்தான் தம்பதியரின் தைப்பூச வாழ்த்து- விதிமுறைகளைப் பின்பற்றி விழாவைக் கொண்டாட அறிவுரை

27 ஜனவரி 2021, 2:17 PM
சிலாங்கூர் சுல்தான் தம்பதியரின் தைப்பூச வாழ்த்து- விதிமுறைகளைப் பின்பற்றி விழாவைக் கொண்டாட அறிவுரை

ஷா ஆலம், ஜன 27- தைப்பூச விழா நாளை கொண்டாடவிருக்கும் இந்துக்களுக்கு குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ளவர்களுக்கு மாட்சிமை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் அல்ஹாஜ் மற்றும் அவரின் துணைவியார் துங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த தைப்பூச விழாவை நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை (எஸ்.ஒ.பி.) பின்பற்றி வீடுகளிலே மிதமான அளவில் கொண்டாடும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பத்து கேவ்ஸ். ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு செல்லும் இரத ஊர்வலத்தில் கலந்து கொள்வோர் தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள எஸ்.ஓ.பி. நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இவ்வாண்டு தைப்பூச விழா சுபிட்மான மற்றும் அமைதியான முறையில் கொண்டாடப்படும் என நாங்கள் நம்புகிறோம் என்று சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முக நூல்  வாயிலாக வழங்கிய தைப்பூச வாழ்த்துச் செய்தியில் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே, சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் மரணச் சம்பவங்கள் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு அமலாக்கத் தரப்பினர் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.