SELANGOR

வாடகை மூலம் வீட்டுக்கு உரிமையாளராகும் ''ஸ்கீம் ஸ்மாட்  சேவா '' சலுகை

13 டிசம்பர் 2020, 5:54 AM
வாடகை மூலம் வீட்டுக்கு உரிமையாளராகும் ''ஸ்கீம் ஸ்மாட்  சேவா '' சலுகை

ஷா ஆலாம், டிச13 : வாடகை மூலம் வீட்டுக்கு உரிமையாளராகும் ''ஸ்கீம் ஸ்மாட்  சேவா '' வின் வழி குறைந்த வருமானம் உடையவர்களுக்கு 2,175  வீடுகளைப்  பெறச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ரூமா சிலாங்கூர்கூ,  ஹராப்பன் மற்றும் ரூமா இடாமான் பிரிவுகளில் வங்கிக் கடனைப் பெறுவதில் சிரமப்படுபவர்களுக்கு முதல் வீடு வாங்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம் என வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான ரோட்சியா இஸ்மாயில்  தெரிவித்தார்

“இந்தத் திட்டம் குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை வாடகைக் காலத்தை அளிக்கிறது. அத்தவணை காலம்  காலாவதியானதும், வாடகைதாரர்களுக்கு வீடு வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப் படுகிறது.

அவர்கள் அவ்வீட்டைத் வாங்க விரும்பவில்லை என்றால், அவர்கள் வீட்டை திரும்ப  ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர்கள் செலுத்திய வாடகைக் கட்டணத்தில் 30 சதவீதத்தைத் திரும்பப் பெறலாம்" என்று ரோட்சியா இஸ்மாயில் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ரூமா சிலாங்கூர்கூ,  ஹராப்பன் மற்றும் ரூமா இடாமான் பிரிவுகளில் ஏர் கண்டிஷனிங், சமையலறை  அலமாரிகள் , துணி  அலமாரிகள் , குளியல் அறைகளில் சுடுநீர் வசதிக்கு வாட்டர் ஹீட்டரும் பொருத்தப்பட்டுள்ளன.

ஜூலை 13 ம் தேதி, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறைந்த வருமானம் உடையவர்களுக்கு (பி 40) RM200,000 க்கும் குறைவான விலையில் சொந்த வீடுகளைப்  பெற உதவும் 2STAY திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி திட்டத்தை வெற்றிகரமாகச்  செயல்படுத்திட 2016 ம் ஆண்டு சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியம் (எல்பிஹெச்எஸ்) மூலம் மாநில அரசு 993 யூனிட் வீடுகளை  வாங்கி  இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி உள்ளது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.