EKSKLUSIF

புதிய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்  ஜனவரி மாதம் நியமிக்கப்படுவாரகள்- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தகவல்

6 டிசம்பர் 2020, 10:48 AM
புதிய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்  ஜனவரி மாதம் நியமிக்கப்படுவாரகள்- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தகவல்

பூச்சோங், டிச 6- சிலாங்கூர் மாநிலத்தில் 279 ஊராட்சி மன்ற இடங்களுக்கு

அடுத்தாண்டு ஜனவரி மாதம் புதிய நியமனங்கள் செய்யப்படும்.

இந்த இடங்களை பி.கே.ஆர். கட்சியை சேர்ந்த 122 உறுப்பினர்களும் ஜசெக சார்பில்

97 உறுப்பினர்களும் அமானா கட்சியின் 60 உறுப்பினர்களும் நிரப்புவர் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

புதிதாக நியமனம் பெறும் உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி

வரை ஈராண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று காலை பூச்சோங் ஜெயா சந்தையில் 2021 ஆம் ஆண்டிற்கான நாள் காட்டிகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம்  அவர்  இதனை சொன்னார்.

கடந்த தவணையின் போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வழங்கிய சேவை குறித்து தாம் மனநிறைவு கொள்வதாகக் கூறிய அவர், பெரும்பாலான உறுப்பினர்கள் அடுத்த தவணையிலும் தங்கள் பொறுப்புகளை தொடர்வார்கள் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.