ஷா ஆலம், நவ 25- சிலாங்கூர் மாநிலத்தில் அதிக பட்சமாக 1,623 கோவிட்-19 சம்பவங்கள் நேற்று பதிவாகின.நேற்று நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 2,188 கோவிட்-19 சம்பவங்களில் 74.2 விழுக்காடு சிலாங்கூரில் பதிவானவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர்.
டோப் கிளோவ் கையுறை தொழிற்சாலையை உள்ளடக்கிய தெராத்தாய் தொற்று
மையத்தில் மட்டும் 1,511 பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று பதிவான நோய்த் தொற்று சம்பவங்களில் 1,539 தற்போதுள்ள தொற்று மையங்களில் இருந்து பரவியவை. 54 சம்பவங்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்
களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மூலம் பரவியவை. இது தவிர, இதர சோதனைகள் மூலம் மேலும் 30 சம்பவங்கள் கண்டறியப்பட்டன என்றார் அவர்.
PBT
ஒரே நாளில் 1,623 பேர் பாதிப்பு- சிலாங்கூரில் உச்சத்தை தொட்டது கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை
25 நவம்பர் 2020, 8:12 AM


