சிலாங்கூரில் இன்று 1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவுஷா ஆலம், நவ 23- சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் மொத்தம் 1,884 பேர் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர்.
இன்று பதிவான மொத்த எண்ணிக்கையில் 63.9 விழுக்காடு அதாவது 1,067 சம்பவங்கள் சிலாங்கூரில் கண்டு பிடிக்கப்பட்டவை என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் இந்நோய் பிடிக்கப்பட்ட 1,203 பேரில் 76.2 விழுக்காட்டினர் அதாவது 1,067 பேர் டோப் கிளோவ் தொழிற்சாலையை உள்ளடக்கிய தெராத்தாய் தொற்று மையத்தை சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலம் இதுவரை 10,955 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
சிலாங்கூரில் 1,203 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு
24 நவம்பர் 2020, 2:22 AM


