PBT

இலவச பஸ் சேவை விரிவாக்கம்- செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

3 நவம்பர் 2020, 4:28 AM
இலவச பஸ் சேவை விரிவாக்கம்- செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

ஷா ஆலம், நவ 3- ஸ்மார்ட் சிலாங்கூர் எனப்படும் இலவச பஸ் சேவையை செலாயாங் நகராண்மைக் கழகம் விரிவாக்கம் செய்துள்ளது.

கூடுதலாக பத்து பஸ்களையும் 55 புதிய நிறுத்தங்களையும் இந்த விரிவாக்க நடவடிக்கை உள்ளடக்கியதாக செலாயாங் நகராண்மைக் கழக வர்த்தக பிரிவு கூறியது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட இந்த இலவச பஸ் சேவையை இதுவரை 65 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

இலவச பஸ் சேவையை பயன்படுத்தும் பயணிகள் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டது.

பஸ் பயணத்தின் போது கூடல் இடைவெளியை கடைபிடித்தல், சுவாசக் கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல் போன்ற நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.