ஷா ஆலம், அக் 19- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு இந்திய சமூகத்திற்கு உதவ கோலக் கிள்ளான் சட்டமன்ற தொகுதி 65,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த தொகை ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் வாயிலாக 650 பேருக்கு வழங்கப்படும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.
ஒவ்வொருவருக்கும் 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டு வழங்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க இந்த பற்றுச் சீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
இந்த ஜோம் ஷாப்பிங் திட்டத்திற்கு மாநில அரசு 45,000 வெள்ளி வழங்கிய வேளையில் எஞ்சிய தொகை நிதியிலிருந்து வழங்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கருத்தில் கொண்டு தமது தொகுதியில் உள்ள 36 தபிகா பாலர் பள்ளிகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
EVENT
தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு உதவ கோலக் கிள்ளான் தொகுதி வெ. 65,000 ஒதுக்கீடு
19 அக்டோபர் 2020, 11:50 AM
