ad
ECONOMY

சிலாங்கூரில் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடா மந்திரி புசார் ஆச்சரியம் 

13 அக்டோபர் 2020, 4:50 AM
சிலாங்கூரில் முழுவதும்  நடமாட்டக் கட்டுப்பாடா  மந்திரி புசார் ஆச்சரியம் 

ஷா ஆலம் 13 அக்; - நாளை 14-10-2020  நள்ளிரவு 12.01 தொடங்கிச்  சிலாங்கூர் மாநிலம் முழுவதும் கோவிட்-19 நோய்த் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதைச் சிலாங்கூர் மந்திரி புசார் சாடியுள்ளார்

நேற்று 12 -10--2020ல்  பெட்டாலிங் மாவட்டத்தில் அதிகக் கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து போலீஸ், சுகாதார இலாக்கா,  பாதுகாப்பு துறை மற்றும் பல ஏஜென்சிகளுடன் தான் சந்திப்பு நடத்தியதில் பெட்டாலிங் மாவட்ட அளவில்  நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப் படுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முழு சிலாங்கூரையும் உள்ளடக்கிய நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் குறித்து அறிவித்துள்ளது குறித்து ஆச்சரியம்  அடைந்ததாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி.கூறினார்.

சிலாங்கூரில் கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டம் தவிர்த்துக் கோம்பாக் மற்றும் உலு லங்காட் பகுதிகள் மட்டுமே கோவிட் -19 தொற்று குறித்த சம்பவங்களைக் கண்டுள்ளன, கோலசிலாங்கூர் மற்றும் சபா பெர்ணம் மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகும் அப்படியிருக்கச் சிலாங்கூர் முழுமைக்குமான நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளது

அது குறித்து மாநில அரசு அதன் கருத்தைத் தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் வழங்கும் என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் மாண்புமிகு அமிருடின் ஷாரி.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.