ECONOMY

பி 40 பிரிவினருக்கு உதவ கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை

10 அக்டோபர் 2020, 1:27 PM
பி 40 பிரிவினருக்கு உதவ கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை

ஷா ஆலம், அக் 10-  ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை திட்டத்தில் குறைவான பயணிகளை ஏற்றக் கூடிய மினி பஸ்களை பயன்படுத்தும் பரிந்துரை மீது சிலாங்கூர் அரசின்  2021 வரவு  செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்.

பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கு குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த பி 40 பிரிவினருக்கு உதவும் வகையில் இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது போக்குவரத்து துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கிராமப் புறங்கள் மற்றும் அதிக பயணிகள் இல்லாத தடங்களில் இந்த பஸ் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 சம்பவங்கள் காரணமாக எதிர் மறையான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என்றார்

அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.