கிள்ளான், அக் 9- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவுவதற்காக சமையல் மற்றும் சுகாதார பொருள்களை சுங்கை காண்டீஸ் சட்டமன்ற தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.உதவி தேவைப்படும் பொது மக்கள் தொகுதி சேவை மையத்தின் அதிகாரிகளை
தொடர்பு கொள்ளலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
உதவி தேவைப்படுவோர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அல்லது கிராமத் தலைவர்-
களை தொடர்பு கொள்ளலாம். அல்லது N49 Dun Sungai Kandis எனும் முகநூல் வழி
தொடர்பு கொண்டால் தகுந்த பதில் அளிப்போம் என்றார் அவர்.
பொது முடக்கம் காரணமாக சுங்கை காண்டீஸ் தொகுதியில் உள்ள தாமான் ஸ்ரீ அண்டலாஸ், ஸ்ரீ டமாக், ஸ்ரீ சியான்தான், ஸ்ரீ தஞ்சோங், ஸ்ரீ பானாங், தாமான் ராக்யாட்
ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
SELANGOR
பொது முடக்கம்; சுங்கை காண்டீஸ் தொகுதியில் சமையல், சுகாதார பொருள்கள் விநியோகம்
9 அக்டோபர் 2020, 11:10 AM


