நீலாய், அக் 6- பாத்தாங் பெனார் ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டுக்கு காரணமானநபர் அடையாளம் காணப்பட்டார். அந்நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த சந்தேகப் பேர்வழி உள்ளூவாசி அல்ல. மாறாக வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்
என்று நெகிரி செம்பிலான் மாநில துணைப் போலீஸ் தலைவர் எஸ்.ஏ.சி. சே ஜக்கரியா ஒத்மான் கூறினார்.
அந்நபரை கைது செய்வதற்காக எங்கள் அதிகாரிகள் வேறொரு மாநிலத்திற்கு சென்றுள்ளனர். நான் அவர்களை தொடர்பு கொண்டபோது அவரை விரைவில் கைது செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர் என்றார் அவர்.
அந்த நபர் கைது செய்யப்பட்டவுடன் மேல் நடவடிக்கைக்காக விரைவில் நெகிரி செம்பிலான் கொண்டு வரப்படுவார் என்று அவர் மேலும் சொன்னார்.
ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் செய்த புகாரின் அடிப்படையில்
இச்சம்பவம் மீது குற்றவியல் சட்டத்தின் 430 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்
கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக அவர், ஆற்று நீரில் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படும் நீலாய் தொழில் பேட்டை பகுதியை ஜக்கரியா பார்வையிட்டார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதியை பார்வையிட்ட நெகிரி செம்பிலான் மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் எஸ். வீரப்பன், அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் சிரம்பான் மாநகர் மன்றம் உள்ளிட்ட தரப்பினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.
ECONOMY
ஆற்றுத் தூய்மைக்கேட்டுக்கு காரணமான நபர் அடையாளம் காணப்பட்டார்
6 அக்டோபர் 2020, 10:14 AM


