ஷா ஆலம், அக் 6- கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மாநிலத்தின் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் மற்றும் கோத்தா டாமன்சாரா உறுப்பினர் ஷாதிரி மன்சோர் ஆகிய இருவரும் இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபடுவதற்குரிய
மனோதிடத்தை பெறுவார்கள் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்
இவ்விரு சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பதில் சம்பந்தபட்ட சேவை மையங்களுக்கு தமது அலுவலகம் தேவையான உதவிகளை செய்யும்
என்றும் அவர் தெரிவித்தார்.
SELANGOR
இரு சட்டமன்ற உறுப்பினர்கள் நலம் பெற மந்திரி புசார் பிரார்த்தனை
6 அக்டோபர் 2020, 7:42 AM


