ஷா ஆலம், அக் 1- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின்எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அதனை தடுப்ப-
தற்கான தீவிர நடவடிக்கைகளை மாநில அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது.
அந்நோய்ப் பரவலை விரைந்து கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அந்நடவடிக்கை கொண்டிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோவிட்-19 தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை மாநில அரசு அணுக்கமாக
கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கோவிட்-19 பணிக் குழு மற்றும் மாநில பாதுகாப்பு மன்றம் ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய கூட்டத்தை தாம் விரைவில் கூட்டவிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
கடந்த நான்கு நாட்களாக சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை
இரண்டு இலக்கங்களாக அதிகரித்துள்ளது.
NATIONAL
கோவிட்-19 பரவலைத் தடுக்க நடவடிக்கை, அரசு விரைவில் அறிவிக்கும்
1 அக்டோபர் 2020, 8:48 AM


