PBT

பெ. ஜெயாவில் குற்றச் செயல்கள் குறைய அண்டை அயலார் பாதுகாப்புத் திட்டம் உதவி

24 செப்டெம்பர் 2020, 10:37 AM
பெ. ஜெயாவில் குற்றச் செயல்கள் குறைய அண்டை  அயலார் பாதுகாப்புத் திட்டம்  உதவி

பெட்டாலிங் ஜெயா, செப் 24- பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அண்டை அயலார் பாதுகாப்பு குழுத் திட்டம் பெரிதும் துணை புரிந்துள்ளது.

இந்த பாதுகாப்பு குழுவின் உருவாக்கம் காரணமாக கடந்தாண்டு இப்பகுதியில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 5.69 வீழ்ச்சி கண்டதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற தொடர்பு பிரிவு அறிக்கை ஒன்றில் கூறியது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் 3,305 ஆக இருந்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 3,117 ஆக குறைந்துள்ளது பாதுகாப்பான நகர கண்காணிப்பு முறையின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளதாக அது கூறியது.

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் அமல் படுத்தப்பட்ட அண்டை அயலார் பாதுகாப்பு இயக்கம் ஆக்ககரமான பலனை தந்துள்ளதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

சுற்று வட்டாரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குடியிருப்பாளர் சங்கம், ருக்குன் தெத்தாங்கா, கூட்டு நிர்வாக அமைப்புகள் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த அண்டை அயலார் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.