SELANGOR

கைவிடப்பட்ட கட்டடங்கள் மற்றும் வளாகங்கள் பிரச்னைகளை ஊராட்சிதுறை கையாள பணிக்கப்பட்டது !!!

17 ஜூலை 2020, 3:02 PM
கைவிடப்பட்ட கட்டடங்கள் மற்றும் வளாகங்கள் பிரச்னைகளை ஊராட்சிதுறை கையாள பணிக்கப்பட்டது !!!

ஷா ஆலம், ஜூலை 17:

சிலாங்கூர் மாநிலத்தில் கைவிடப்பட்ட கட்டிடங்கள் அல்லது வளாகங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளூர் ஊராட்சிதுறை அதிகாரிகளுக்கு (பிபிடி) அறிவுறுத்தப் பட்டுள்ளதாக டத்தோ மந்திரி பெசார் அமிரூடின் ஷஹாரி தெரிவித்தார்.

நோய்களை உண்டுக்காக்கும் சூழல் மற்றும் அநாவசிய செயல்களின் கூடாரமாகவும் அஃது மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய ஊராட்சிதுறை உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

உலுசிலாங்கூரில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் சில கட்டிடங்கள் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என தெரிய வந்துள்ளதாகவும் நினைவுக்கூர்ந்த அவர் அதனை சீரமைத்து அக்கட்டிடங்களை தங்கும் விடுதிகளாகவும்,விளையாட்டுக் கழகங்களாகவும் மற்றுமின்றி சமூகநல இல்லங்களாகவும் மாற்றப்படவிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், அபிவிருத்தி திட்டமிடல் இல்லாமல் கைவிட்ட நிலையில் இருக்கும் கட்டிடங்கள் மீது ஊராட்சிதுறையின் கவனம் பட வேண்டும் என்று கூறிய அவர் ஊராட்சித்துறை அதிகாரிகள்,நில அலுவலகங்கள் ஆகியோர்ய் எச்சரிக்கை அறிவிப்புகளை முன்னதாக வழங்க வேண்டும் எனவும் நினைவுறுத்தினார்.அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது என்றும் அவர் மேலும் நினைவுறுத்தினார்.

பத்தாங் காளி சட்டமன்ற உறுப்பினர் அழகிய தோற்றத்தை சிதைக்கும் வகையில் இருக்கும் கைவிடப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் குறித்து சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மாநில மந்திரி பெசார் இவ்வாறு விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில்,அரசாங்கத்திற்கு சொந்தமான செயலற்ற கட்டிடங்களை பராமரிப்பதற்கு அதனை சீரமைப்பதற்கு அதுசார்ந்த இலாகா அல்லது ஏஜென்சிகள் மானியங்களுக்கு விண்ணப்பம் செய்தல் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும்,பழுதுபார்ப்புக்கான நிதிஉதவிக்கு மாநில அல்லது மத்திய கருவூலத்துடன் தொடர்புடைய துறை அல்லது நிறுவனம் விண்ணப்பிக்க வேண்டும். ஒதுக்கீடு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது வருடாந்திர திட்டத்தில் சேர்க்கப்படும். வழக்கமாக நிதி திட்டமிடல் முன்னதாகவே செய்ய ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் மந்திரி பெசார் தனது விளக்கத்தின் போது அவையில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.