NATIONAL

இ-டாப்போர் திட்டம் தொடரும், 1,000 தொழில் முனைவர்கள் பயன் அடைவார்கள்- மந்திரி பெசார்

13 ஜூலை 2020, 4:15 AM
இ-டாப்போர் திட்டம் தொடரும், 1,000 தொழில் முனைவர்கள் பயன் அடைவார்கள்- மந்திரி பெசார்

ஷா ஆலம், ஜூலை 13:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இ-டப்போர் மற்றும் பிளேட்ஃபோம் சிலாங்கூர் (பிளேட்ஸ்) திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார். ரிம 12 மில்லியனல ஒதுக்கீடு செய்துள்ள மாநில அரசாங்கம் 1000 தொழில் முனைவர்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது பிளேட்ஸ் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு மளிகைக் கடை, உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் மாநிலத்தில் தயாரிக்கும் பொருட்கள் போன்றவற்றிற்கு இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என அவர் விளக்கினார்.

" இதுவரை இ-டப்போர் திட்டம் 133 தொழில் முனைவர்களுக்கு உதவி இருக்கிறது. இதில் ரிம 1.5 மில்லியன் மதிப்பிலான விற்பனையை எட்டியுள்ளது," என இன்று பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.

கடந்த ஏப்ரல் 8-இல் தொடங்கிய இத்திட்டம், கிரேப் மற்றும் பிளேட்ஸ் இணைந்து உணவுத் துறையில் ஈடுபட்டிருக்கும் அங்காடி வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களை இலக்காக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டிஜிட்டல் நன்முயற்சி தொழில் முனைவர்களுக்கு இணையத்தில் தங்களது பொருட்களை வணிகம் செய்ய பேருதவியாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

Inisiatif digitalisasi itu membantu usahawan meneruskan operasi secara dalam talian bagi memperluaskan akses pasaran.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.