RENCANA PILIHAN

பள்ளிகளுக்கு 74 உடல் வெப்பநிலை சோதனைக் கருவிகளை சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார் !!!

9 ஜூலை 2020, 2:55 PM
பள்ளிகளுக்கு 74 உடல் வெப்பநிலை சோதனைக் கருவிகளை சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார் !!!

போர்ட் கிள்ளான், ஜூலை 9:

போர்ட் கிள்ளான் வட்டாரத்தில் உள்ள 37 பள்ளிகளுக்கு 74 உடல் வெப்பநிலை சோதனை கருவிகளை போர்ட் கிள்ளான் மற்றும் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர். அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் பள்ளித் தவணைக்கு தயாராக இந்த கருவிகள் இலவசமாக வழங்கியதாக போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜாமான்ஹூரி தெரிவித்தார். அவரோடு பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் தோனி லியோங் துக் இணைந்து கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து ஏற்படாமல் இருக்க இது உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

" மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது. பள்ளிகள் எங்களுக்கு விண்ணப்பங்கள் செய்தால், நாங்கள் உடனடியாக உதவிகள் செய்வோம். கோவிட்-19 காலகட்டத்தில் நிகழ்ச்சிகள் செய்ய முடியாமல் போனதால், மிச்சமாகும் நிதியை கருவிகள் வாங்க பயன்படுத்தினோம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

அடுத்த வாரம் தொடங்கவிருக்கும்  சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி கூடுதல் ஒதுக்கீடு வழங்கினால், மேலும் உடல் வெப்பநிலை சோதனைக் கருவிகள் வாங்க பயன்படுத்தப்படும் என அஸ்மிஸாம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.