SELANGOR

1072 வணிகர்கள் வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் திட்டத்தில் வழி பயனடைந்தனர் !!!

30 ஜூன் 2020, 4:50 AM
1072 வணிகர்கள் வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் திட்டத்தில் வழி பயனடைந்தனர் !!!
1072 வணிகர்கள் வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் திட்டத்தில் வழி பயனடைந்தனர் !!!

ஷா ஆலம், ஜூன் 29:

கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1072 வணிகர்களுக்கு ரிம 430,000-ஐ சிலாங்கூர் மாநில அரசாங்கம்  ஒதுக்கீடு செய்துள்ளது. சிலாங்கூர் மாநில பொருளாதார ஊக்குவிப்பு 2.0 திட்டத்தின் வழி ஒவ்வொருவருக்கும் தலா ரிம 400-ஐ மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும் என பரிவுமிக்க அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தெரிவித்தார்.

" பிகேபி காலகட்டத்தில் ரிம 400 உதவி நிதி சிறு வணிகர்களுக்கு தங்களது வியாபாரத்தை மீண்டும் தொடங்க உறுதுணையாக இருக்கும். இருந்தாலும், இந்த வணிகர்கள் சுகாதார அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) மற்றும் ஊராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மாநில அரசாங்கம் நினைவு படுத்தி உள்ளது," என்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு கணபதி ராவ் பேசினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.