NATIONAL

பிகேபி காலகட்டம் தொடங்கி இன்று வரை 8,915 கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது !!!

26 ஜூன் 2020, 4:52 AM
பிகேபி காலகட்டம் தொடங்கி இன்று வரை 8,915 கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது !!!

புத்ராஜெயா, ஜூன் 25:

வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின் கீழ், மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி இதுவரை, 134 மண்டலப் பகுதியை உட்படுத்தி  8,915 கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இரண்டாயிரத்து 675 வர்த்தக மையங்கள், ஐந்தாயிரத்து 366 அரசாங்க கட்டிடங்கள், ஆயிரத்து 591 வீடமைப்பு பகுதிகள், இரண்டாயிரத்து 509 பொது இடங்கள் மற்றும் 354 பேரங்காடிகளை உட்படுத்தி, 12 ஆயிரத்து 495 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

புதன்கிழமை மட்டும் 10 மாநிலங்களில் இருக்கும் 10 மண்டலப் பகுதிகளை உட்படுத்தி 41 கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, ஜூன் 10-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் நுழைவாயில் வாயிலாக நாட்டிற்குள் நுழைந்த 5,451 பேரிடம் சுகாதார அமைச்சு கொவிட்-19 நோய்க்கான சோதனையை மேற்கொண்டிருக்கிறது.

அதில், 5,423 பேருக்கு அந்நோய் தொற்றவில்லை என்று உறுதிப் படுத்தப்பட்டப் பின்னர், தங்களின் வீடுகளில் கட்டாயமாக தனிமைப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.

எஞ்சிய 28 பேருக்கு அந்நோய் தொற்றியிருப்பதால், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு நிலவரத்தில், புதன்கிழமை நாடு முழுவதிலும், 113 கட்டுமான பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

இதில், 72 கட்டுமான பகுதிகள் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறையை முறையாக பின்பற்றப்படுவதாகவும், எஸ்.ஓ.பியை முறையாகப் பின்பற்றாத 11 பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எஞ்சிய 30 கட்டுமான பகுதிகள் செயல்பாட்டில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.