PBT

அக்டோபர் 20-இல் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம், மாநகராட்சி மன்ற அந்தஸ்தை அடைகிறது !!!

25 ஜூன் 2020, 2:02 AM
அக்டோபர் 20-இல் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம், மாநகராட்சி மன்ற அந்தஸ்தை அடைகிறது !!!

ஷா ஆலம், ஜூன் 25:

நகராண்மைக் கழகத்தில் இருந்து மாநகராட்சி அந்தஸ்தை சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் எதிர் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் அமையவிருக்கிறது. சிலாங்கூர் மன்னர், சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின்  (எம்பிஎஸ்ஜே) தலைவர் நோரைய்னி ரோஸ்லான் கூறுகையில், 1997 முதல் 22 ஆண்டுகளாக நகராண்மைக் கழக அந்தஸ்தில்  உள்ளது என்றார்.

"சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலைப் பெற்றது எம்பிஎஸ்ஜேக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்பிஎஸ்ஜே) பிரகடனம் மற்றும் அமலாக்கத்திற்கான தேதி அக்டோபர் 20, 2020 ஆகும்" என்று நேற்று நடந்த எம்பிஎஸ்ஜே முழு கூட்டத்தில் அவர் கூறினார். கடந்த ஆண்டு நவம்பரில், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ அமிருடின் ஷாரி, 2019 அக்டோபர் 31 அன்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சகத்தின் கடிதத்தின் மூலம் எம்பிஎஸ்ஜே தனது நிலையை மாநகராட்சியாக மாற்றுவதில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

கோல லங்காட் நகராண்மைக் கழகமாகவும்  மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை, சிலாங்கூரில் இரண்டு மாநகராட்சி மன்றங்கள் உள்ளன, ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மற்றும் ஏழு நகராண்மைக் கழகங்கள் (சுபாங் ஜெயா, செலயாங், அம்பாங் ஜெயா, கிளாங், கஜாங், செபாங் மற்றும் கோலா லங்காட்). மாவட்ட சபைகளில் உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகியவை அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.