NATIONAL

எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டும் நடவடிக்கையை பாக்காத்தான் கண்டித்தது !!!

22 ஜூன் 2020, 10:35 AM
எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டும் நடவடிக்கையை பாக்காத்தான் கண்டித்தது !!!

ஷா ஆலம், ஜூன் 22:

அரசாங்கக் கொள்கையை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்த முயற்சிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பாக்காத்தான் ஹாரப்பான் (பாக்காத்தான்) கண்டித்தது. தேசிய கூட்டணி அரசாங்கம் தங்கள் அரசியல் போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளை முதிர்ச்சியடைந்த நிலையிலும் மற்றும் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும் என்று பாக்காத்தான் செயலக மன்றம் தெரிவித்தது.

" இந்த நடவடிக்கை உலகின் பார்வையில் மலேசியாவின் அரசியல் மற்றும் ஜனநாயகம் குறித்த எதிர்மறையான கருத்தை மட்டுமே உருவாக்கும். எனவே அதை உடனடியாக நிறுத்துமாறு பாக்காத்தான் செயலக மன்றம் கேட்டுக் கொள்கிறது. மலேசியாவில் உள்ள ஜனநாயக நடைமுறை தங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களுக்காக அழிக்க விரும்புவோரிடமிருந்து பாதுகாக்கப்பட்டு காப்பாற்றப்பட வேண்டும்" என்று அவர் இன்று ஒரு கூட்டு அறிக்கையில் பாக்காத்தான் தெரிவித்தது.

பாக்காத்தான் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்துயோன் இஸ்மாயில்  (மக்கள் நீதி கட்சி), காலிட் அப்துல் சமத் (அமானா) மற்றும் அந்தோனி லோக் (ஜசெக) ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா  திருமணத்திற்கான வயது வரம்பு குறித்து கேள்வி எழுப்பிய காரணத்தால் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி, கோலா லங்காட் எம்.பி. டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மார்ச் 18 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் கூட்டத்தை கேள்வி எழுப்பிய ஒரு குறுகிய வீடியோ கிளிப் மூலம் விசாரிக்கப்பட்டார். மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானும் ஒரு சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அரசாங்கத்தை சாடியது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளிக்க  அழைக்கப்பட்டது தொடர்பில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.