SELANGOR

மந்திரி பெசார்: தொழில்துறை நிறுவனங்கள் கோவிட்-19 அச்சுறுத்தலை உணர்ந்து எஸ்ஓபிகளை பின்பற்றி வருகின்றனர்

19 ஜூன் 2020, 2:57 AM
மந்திரி பெசார்: தொழில்துறை நிறுவனங்கள் கோவிட்-19 அச்சுறுத்தலை உணர்ந்து எஸ்ஓபிகளை பின்பற்றி வருகின்றனர்
மந்திரி பெசார்: தொழில்துறை நிறுவனங்கள் கோவிட்-19 அச்சுறுத்தலை உணர்ந்து எஸ்ஓபிகளை பின்பற்றி வருகின்றனர்

கிள்ளான், ஜூன் 18:

பணியில் ஈடுபடும் போது சமூக இடைவெளியை மேற்கொள்வதன் மூலம் சீரான செயலாக்க  நடைமுறைகளை  (எஸ்ஓபி) பின்பற்றி வருகின்ற எஸம்லி செர்விஸஸ் நிறுவனத்தின் ஊழியர்கள்  கோவிட் -19 அச்சுறுத்தலை உணர்ந்துள்ளனர் என்பதை நிரூபிக்கிறது என டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இந்த வளர்ச்சியைக் கண்டு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்திற்கு ஏற்ப பணியாளர்கள் தங்களை மாற்றிக் கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

" கிட்டத்தட்ட 140 யூனிட் வியோஸ் மற்றும் யாரிஸ் வாகனங்கள் தினசரி உற்பத்தி செய்யப்படுவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெற்றிகரமாக தங்களை ஒழுங்குபடுத்தி, அவர்களின் முழு திறனை (செயல்பாட்டை) வெளிப்படுத்தியதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது பொருளாதார மற்றும் கோவிட் -19 இன் விளைவுகளில் இருந்து மீட்சி பெற்றுள்ளதைக் காட்டுகிறது," என்று புக்கிட் ராஜாவில் உள்ள ஆலையை பார்வையிட்ட பிறகு சிலாங்கூர் மந்திரி  பெசார் கூறினார்.

யுஎம்டபிள்யூ டொயோட்டாவின் இதே போன்ற தொழிற்சாலையை மற்றொரு இடத்தில் கட்டும் நோக்கம் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தை தேவையை பூர்த்தி செய்யும் சிலாங்கூரின் பொருளாதார திறனை நிரூபிக்கிறது. கூட்டு வருகையின் போது யுஎம்டபிள்யூ டொயோட்டா ரிம 4,500 மதிப்புள்ள 100 யூனிட் சுய பாதுகாப்பு ஆடைகளையும் (பிபிஇ) நன்கொடையாக வழங்கியது. டொயோட்டா மலேசியாவின் யுஎம்டபிள்யூ துணைத் தலைவர் அகியோ டேகயாமா மற்றும் நிறுவனத்தின் பிரசிடென்ட் ரவீந்திரன் குருசாமி ஆகியோர் முன் வரிசை பணியாளர்கள் பயன்படுத்த பிபிஇ ஆடைகளை அமிருடின் ஷாரியிடம் வழங்கினர்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.