கோலா லம்பூர், ஜூன் 19:
நேற்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) ரிம 20,000 லஞ்சத்தைக் கேட்டுப் பெற்றதாக நம்பப்படும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை கைது செய்துள்ளதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் டத்தோ அலியாஸ் சாலிம் கூறினார். 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நேற்று மாலை 5.30 மணியளவில் சிலாங்கூர் மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் தடுக்க வைக்கப்பட்டார் என்றார்.
" சந்தேகிக்கப்படும் நபர், விபத்து ஏற்பட்டு வாகன காப்புறுதி பணத்தை சீக்கிரம் பெறுவதற்கு ஒருவரிடமிருந்து பணத்தை கேட்டுப் பெற்றிருக்கிறார்," என்று பெர்னாமாவிடம் அவர் கூறினார். கைது செய்யப்பட்ட அந்த நபர் இன்று காலை 9 மணி அளவில் ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்க கோரப்படும் என்று அலியாஸ் தெரிவித்தார்.


