ஷா ஆலம், ஜூன் 15:
உலு சிலாங்கூர் மாவட்டம் கோவிட்-19 நோய் தாக்கத்தில் இருந்து மீண்டதாகவும் தொடர்ந்து எந்த ஒரு புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இதன் அடிப்படையில் உலு சிலாங்கூர் மாவட்டம் முதல் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
" ஆண்டவன் ஆசிர்வாதத்தில் உலு சிலாங்கூர் மாவட்டம், சிலாங்கூரில் முதல் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படுகிறது," என்று மந்திரி பெசார் தமது டிவிட்டரில் பதிவு செய்தார்.
இதனிடையே, இரண்டு சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டதில் கோலா சிலாங்கூரில் முதியோர் இல்லத்தில் ஒரு சம்பவமும் செப்பாங்கில் ஒரு சம்பவமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


