ஷா ஆலம், ஜூன் 7:
நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் இருந்தபோதிலும் தங்கள் தலையாய பொறுப்புகளை மறந்துவிடக் கூடாது என்று பிரதிநிதிகளுக்கு நினைவூட்டப்படுகிறது. தற்போதைய நடமாடும் கட்டுப்பாடு ஆணை தளர்வு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் மாநில சட்டமன்றம் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கம் போல் மக்களை சந்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
" மக்களுடன் தொடர்ந்து தங்கள் பணிகளைச் செய்யம்படி நான் மக்கள் பிரதிநிதிகளை ஊக்குவிக்கிறேன்" என்று கெஅடிலான் தலைவர் ஒரு நேரடிமுகநூல் பதிவில் தெரிவித்தார். அதே நேரத்தில், இன்று போர்ட் டிக்சனில் ஒரு களப்பயணத்தின் போது உதவிய மாவட்ட அலுவலகம், ஊராட்சி மன்ற அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் உலகளாவிய அமைதி மிஷன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் ஆறு வீடுகளுக்குச் சென்று ஜிபிஎம் வழங்கிய நன்கொடைகளை விநியோகம் செய்தார். 1,000 உணவுக் கூடைகளை பொது மக்களுக்கு விநியோகித்தார்.


