நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது முடக்கம் கண்டிருந்த பல நடவடிக்கைகளும் துறைகளும் மீண்டும் செயல்படவிருந்தாலும் வரும் ஜுன் முதல் அமலுக்கு வரவிருக்கும் மீட்பு நிலை கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில், சில துறைகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் அறிவித்தார்.
செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கும் அல்லது இன்னும் அனுமதிக்கப்படாத அனைத்து நடவடிக்கைகள் மற்றும் துறைகள் குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடலாம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, மீட்பு நிலை கட்டுப்பாட்டு உத்தரவு குறித்து வழங்கிய சிறப்பு உரையில் பிரதமர் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.


