NATIONAL

மந்திரி பெசார்: தாமான் லங்காட் குடியிருப்பாளர்களுக்கு ரிம 100,000 மதிப்பிலான உணவுபொருட்கள்

7 ஜூன் 2020, 9:31 AM
மந்திரி பெசார்: தாமான் லங்காட் குடியிருப்பாளர்களுக்கு ரிம 100,000 மதிப்பிலான உணவுபொருட்கள்
மந்திரி பெசார்: தாமான் லங்காட் குடியிருப்பாளர்களுக்கு ரிம 100,000 மதிப்பிலான உணவுபொருட்கள்

கோல லங்காட், ஜூன் 7:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை  (சிபிபி) நிர்வாகத்தின் கீழ் தாமான் லங்காட்மூர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா வீடமைப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவு உதவி வழங்க மாநில அரசு ரிம 100,000 ஒதுக்கியுள்ளது. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், அரிசி, எண்ணெய் மற்றும் சாடின் போன்ற அடிப்படை உணவு உதவி ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

" குடியிருப்பாளர்கள்  அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நபர்களிடமிருந்தும் உதவி பெறுகிறார்கள்," என்று அவர் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார். அதே நேரத்தில், அனைத்து குடியிருப்பாளர்களும் பரிசோதனை செய்யப் பட்டதாக அவர் கூறினார், ஆனால் 1,300 நபர்களின் முடிவு இன்னும் அறியப்படவில்லை, செவ்வாய்க்கிழமைக்குள் அது பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ எல்லோரும் பொறுமையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் நடவடிக்கை அறைக்கு வரலாம், மேலும் அவர்களுக்கு உதவ 24 மணி நேர சுகாதார மையத்தையும் திறப்போம், ”என்றார். இன்று காலை, கோலா லங்காட் மாவட்ட அதிகாரி முகமட்  ஜுஸ்னி ஹாஷிம், மே 3 முதல் பிகேபி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரு வீடமைப்பு பகுதிகளில் இருந்து 4,627 குடியிருப்பாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.