RENCANA PILIHAN

சிலாங்கூர் வேளாண்மை சந்தை கோவிட்-19 முற்றிலும் ஒழிந்த பின்னரும் தொடரும்- இஸாம் ஹாசிம்

6 ஜூன் 2020, 8:34 AM
சிலாங்கூர் வேளாண்மை சந்தை கோவிட்-19 முற்றிலும் ஒழிந்த பின்னரும் தொடரும்- இஸாம் ஹாசிம்

ஷா ஆலம், ஜூன் 6:

கோவிட் -19 தொற்று நோய் ஒழிந்த பிறகும் சிலாங்கூர் வேளாண் சந்தை நடவடிக்கைகள் தொடரும் என்று நவீன வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை  ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார். சந்தையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு நான்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அதாவது நிரந்தர தளங்களை உருவாக்குதல், பகுதிக்கு ஏற்ப தளங்களை நகர்த்துவது, வேளாண்மை 'மால்கள்' மற்றும் பொது சந்தை நிலையை வேளாண் சந்தைகளாக மாற்றுவது என்று இர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

"பொது சந்தை நிலையை சிலாங்கூர் வேளாண்மை சந்தைக்கு மாற்றுவது தொடர்பாக மாநில அரசு ஊராட்சி மன்றத்தின் அதிகாரிகளுடன்  விவாதிக்கும். ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களும் குறைந்தபட்சம் ஒரு சந்தை மாற்றுவதற்கான எங்கள் இலக்கைத் தொடங்குவோம்" என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டு விலையை விடக் குறைவாக இருப்பதால் சிலாங்கூர் வேளாண் சந்தைக்கு அதிக தேவை உள்ளது என்று இஷாம் கூறினார். "சமீபத்திய நோன்பு  மாதத்தில் கோழி மற்றும் இறைச்சி கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்கப்பட்டன, மற்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மலிவாக விற்கப்பட்டன, ஏனெனில் அவை நடுத்தரகர்கள் வழியாக செல்லவில்லை.

"சிலாங்கூர் வேளாண்மை சந்தையின் செயல்பாடுகளை எவ்வாறு விரிவுபடுத்துவது மற்றும் விவசாய பொருட்களை எவ்வாறு நேரடியாக விற்பனை செய்வது என்பது குறித்து நான் எதிர்காலத்தில் ஃபாமாவுடன் ஒரு சந்திப்பை நடத்துவேன்" என்று அவர் கூறினார். சிலாங்கூர் வேளாண் சந்தை மார்ச் 27 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து ரிம 13 மில்லியன் விற்பனையை பதிவு செய்தது, அதே நேரத்தில் மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நோன்பு பெருநாள் காலத்தில் பொருட்கள் வாங்கும் சந்தை ரிம 560,000 விற்பனையை எட்டியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.