புத்ராஜெயா, ஜூன் 4:
பொதுப்பணித்துறை துணை அமைச்சர், ஷாருடின் சாலே தமது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தாம் தற்போதைய அரசியலைக் குறைவாக எடைப்போட்டு, பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இணைந்தது குறித்து அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 14-ஆவது பொதுத்தேர்தலில், நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் தம்மை ஆதரித்து வெற்றி பெற வைத்த ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற மக்களுக்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதே, இந்தப் பதவி விலகலுக்கு மூலக் காரணமென்றும் அவர் குறிப்பிட்டார்.தமக்கு இந்த துணையமைச்சர் பதவி, நடப்பு அரசாங்கமான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் மூலமாகக் கிடைத்தது.
இருப்பினும், தமது தவற்றைத் தொடக்கத்திலேயே திருத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில், தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஷாருடின் கூறினார்.
- பெர்னாமா


