இந்த எண்ணிக்கை, சேவை, விவசாயம், உற்பத்தி போன்ற பொருளாதாரத் துறையைச் சார்ந்து வீட்டிலிருந்து வேலைச் செய்பவர்களையும் உட்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். செவ்வாய்க்கிழமை பரிவுமிக்க பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் குறித்த ஏழாவது அறிக்கையை முகநூல் வாயிலாக வெளியிட்டபோது பேசிய அவர், 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், வேலையின்மை விகிதம் 3.5 விழுக்காடாக இருப்பதாகக் கூறினார்.
கொவிட்-19 நோய் தாக்கத்தினால், உலகமெங்கும் வேலையின்மை விழுக்காடு வழக்கத்திற்கும் அதிகமாக பதிவாகி இருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார். ஆகவே, இக்காலக்கட்டத்தில், தொழிலாளர்களும், மக்களும் எதிர்நோக்கும் சவால்களை அரசாங்கம் அறிந்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
- பெர்னாமா


