SELANGOR

புக்கிட் அந்தாராபங்சாவில் ஏற்பட்ட நிலச்சரிவை மாநில அரசாங்கம் கண்காணிக்கும் !!!

30 மே 2020, 5:07 PM
புக்கிட் அந்தாராபங்சாவில் ஏற்பட்ட நிலச்சரிவை மாநில அரசாங்கம் கண்காணிக்கும் !!!

அம்பாங், மே 30:

புக்கிட் அந்தாராபங்சா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை மாநில அரசு கண்காணிக்கும் எனவும் 2008 முதல் கடந்த ஆண்டு வரை இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி  பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். " இந்த பகுதி சற்று நிலையற்றது, ஆனால் 80-களில் இருந்து சில வீடுகள் கட்டப்பட்டுள்ளன, எனவே இதுபோன்ற சம்பவங்கள் அல்லது பெரிய பேரழிவுகளைத் தடுக்க மாநில அரசு அவ்வப்போது கண்காணித்து வருகிறது" என்று அவர் கூறினார்.

இங்குள்ள யுகே கிளப் பூங்காவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார், சுமார் 40 வீடுகளை நிலச்சரிவு  பாதித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், கடுமையான நில நகர்வைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள ஒரு பங்களாவை இடிக்க உத்தரவிடப்பட்டதுடன், குடியிருப்பாளர்கள் மற்றும் அருகிலுள்ள இரண்டு வீடுகளையும் உடனடியாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை செரிங் நதி மற்றும் அதன் கிளை நதியையும் அகலப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டது  என்று அமிருதின் கூறினார்.

" மேம்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் நடமாடும்  கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) காரணமாக எங்களால் தொடர முடியவில்லை. அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஏஜே) இந்த விஷயத்தை அடுத்த வியாழக்கிழமை மாநில பொருளாதார நடவடிக்கை மன்றத்திற்கு கொண்டு வரும்" என்று அவர் கூறினார். இன்று நிலச்சரிவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் நலன் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஏழு நாட்களுக்கு அருகிலுள்ள ஹோட்டலுக்கு மாற்றப்படுவார் என்றார்.

"பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் மாநில அரசு உதவும், மீட்பு செயல்முறை ஆறு மாதங்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இது நீண்ட காலம் எடுக்கும், எம்.பி.ஏ.ஜே விரைவில் அவ்வாறு செய்யும்" என்று அவர் கூறினார். இதற்கிடையில், வீடமைப்பு மற்றும்  ஊராட்சித்துறை அமைச்சர் ஜுரைடா கமாருதீன் அதே செய்தியாளர் கூட்டத்தில், சுங்கை செரிங் நீரோடை மேம்படுத்த இதற்கு முன்னர் ரிம 100,000 ஒதுக்கீட்டைப் பெற்றது. இருந்தாலும், இதை மேம்படுத்துவதற்கு மாநில அரசு ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியிருக்கும் எனறு அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் மேலும் தெரிவித்தார்.

அப்பகுதியில் வசிப்பவர்களை சுற்றியுள்ள வீடுகளில் சரிவுகளை கண்காணிப்பதன் மூலம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நினைவூட்டினார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட நிலச்சரிவை சரி செய்ய 70 மீட்டர் உயரத்துடன் நான்கு மீட்டர் உயர தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று எம்பிஏஜே தலைவர் டத்தோ அப்துல் ஹமீத் உசேன் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.