NATIONAL

பாக்காத்தான் மக்களின் ஆணையை மீட்டெடுக்க போராடும் !!!

17 மே 2020, 12:37 PM
பாக்காத்தான் மக்களின் ஆணையை மீட்டெடுக்க போராடும் !!!

ஷா ஆலம், மே 17:

14-வது பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட பாக்காத்தான்  ஹாராப்பான் (பாக்காத்தான்) மற்றும் அவர்களது தோழமை கட்சிகள் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். பாக்காத்தான் தலைவர்  மற்றும் முக்கிய கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட செய்திக்குறிப்பில், பாக்காத்தான் அரசாங்கத்தை மீண்டும்  கைப்பற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகின்றனர்.

" டான்ஸ்ரீ முஹீடின் யாசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தனது ஆதரவை நிரூபிக்கத் தவறியதால் அரசாங்கம் சட்டபூர்வமான சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது," என்று அந்த அறிக்கை இன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) மற்றும் சிறப்பு தூதர்களாக நியமனம்  செய்வதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாகக் கருதப்படும் அரசாங்க நடத்தை குறித்தும் மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

" இது ஒரு மோசமான நடைமுறை மற்றும் 22 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சீர்திருத்தத்தை சீர்குலைத்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே போன்ற அறிக்கையில், பல புதிய அமைச்சுகள் இருப்பதையும் பாக்கத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது நிச்சயமாக வணிக பயணம் மற்றும் இந்த அமைச்சகங்களுடன் தொடர்புடைய எந்தவொரு செலவுகளையும் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது," என்று அவர் கூறினார்.

இந்த அறிக்கையில் கெஅடிலன் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் மொஹமட் சாபு, டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் சபா வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஷாஃபி அப்தால் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.