NATIONAL

1,248 வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டனர் - காவல்துறை

17 மே 2020, 7:17 AM
1,248 வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டனர் - காவல்துறை

புத்ராஜெயா, மே 17:

நேற்று சாலைத் தடுப்புச் சோதனைகளை கடக்க முயன்றபோது 1,248 வாகனங்கள் திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். நேற்றைய 508 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

" பல்வேறு காரணங்களுக்காக அதிகமான மக்கள் கிராமத்திற்குத் திரும்ப முயற்சிக்கின்றனர். எனவே கிராமத்திற்கு, குறிப்பாக நோன்பு பெருநாளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். இதுவரை பலரை காவல்துறையினர் திரும்பிச் செல்ல உத்தரவிட்டுள்ளனர். அனுமதி இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதனால், நிச்சயமாக நமக்கு நஷ்டமே," என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தினசரி ஊடக மாநாட்டில் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.