ஷா ஆலம், மே 16:
நேற்று நிலவரப்படி 222 எம்.பி.க்கள் உட்பட நாடாளுமன்ற பணியாளர்கள் சேர்த்து மொத்தம் 750 கோவிட் -19 தொற்று நோய் பரிசோதனை நாடாளுமன்றத்தில் செய்யப்பட்டன என்று சுகாதார இயக்குநர் தெரிவித்தார். டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், பரிசோதனை முடிவுகளில் அனைவரும் நோயில் இருந்து விடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
" நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, நாடாளுமன்ற ஊழியர்களுக்கும், நேற்று பரிசோதனைக்கு கடைசி நாள். ஆனால் பரிசோதனை மாதிரிகள் எங்களிடம் உள்ளன, இரண்டு நாட்களில் முடிவுகள் கிடைக்கும்" என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, நாடாளுமன்ற ஊழியர்களின் சோதனை முடிந்ததும் அனைத்து எம்.பி.க்களும் கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுவார்கள் என்று நூர் ஹிஷாம் கூறினார். மார்ச் 9 முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் மே 18 அன்று ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது. 14 வது நாடாளுமன்ற மூன்றாவது கூட்டத்தின் திறப்பு விழாவை மேன்மை தங்கிய மாமன்னர் அப்துல்லா அல்-சுல்தானுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அதிகாரப் பூர்வமாக திறந்து வைக்க உள்ளார்.


