NATIONAL

'எலிப்பாதை' வழியாக நாட்டிற்குள் நுழைந்த 1,400 மேற்பட்ட சட்ட விரோத குடியேறிகள் கைது !!!

16 மே 2020, 7:52 AM
'எலிப்பாதை' வழியாக நாட்டிற்குள் நுழைந்த 1,400 மேற்பட்ட சட்ட விரோத குடியேறிகள் கைது !!!

ஷா ஆலம், மே 16:

இந்த மாதம் முழுவதும் நிலம் மற்றும் நீர் வழியாக 'எலி பாதைகள்' மூலம் நாட்டிற்குள் நுழைய முயன்றதற்காக 1,408 சட்டவிரோத குடியேறியவர்களை  பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்தனர் என மூத்த அமைச்சர் (பாதுகாப்புக்) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். சட்ட விரோத குடியேறிகளை கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 முக்கிய நபர்களை (தெக்கோங்) அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

" சட்ட விரோத குடியேறிகள் நுழைவதைத் தடுக்க நிலம் மற்றும் கடல் எல்லைக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் இறையாண்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது" என்று புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். இதற்கிடையில், நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை (சிபிபி) பின்பற்றி ரத்து செய்யப்பட்ட பயணப் கட்டணங்களை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க பயண முகவர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இஸ்மாயில் சப்ரி அறிவுறுத்தினார்.

" இது சுற்றுலாப் பயணிகளுக்கும் பயண முகவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை ஆகும். அரசாங்கத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, அது வாடிக்கையாளரின் விருப்பப்படி பயணம் ரத்து செய்யப்பட்டதால் பணத்தை திருப்பித் தர வேண்டும். அவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை என்றால், பயணத்தை  எதிர்காலத்தில் ஒத்திவைக்கப்படலாம், எனவே இரு தரப்பினரும்  நஷ்டம் இருக்காது," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.