SELANGOR

பிகேபிடி: புக்கிட் காசிங் சட்ட மன்ற உறுப்பினர் மூத்த குடிமக்களுக்கு இலவச உணவு வழங்குகிறார்

13 மே 2020, 3:55 PM
பிகேபிடி: புக்கிட் காசிங் சட்ட மன்ற உறுப்பினர் மூத்த குடிமக்களுக்கு இலவச உணவு வழங்குகிறார்

பெட்டாலிங் ஜெயா, மே 13:

கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிடி) இன் கீழ் மூத்த குடிமக்கள்  மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  புக்கிட் காசிங் சட்ட மன்ற சேவை மையம்  இலவச உணவை வழங்குகிறது என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். புக்கிட் காசிங் பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக சட்ட மன்ற உறுப்பினர்  ராஜீவ் ரிஷகாரன் கூறினார். மூத்த குடிமக்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள்   மற்றும் இந்த பகுதியில் சமைக்கும் திறன் இல்லாதவர் உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

" தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்காக அவர்களின் விவரங்களை (பெயர், முகவரி, தொலைபேசி எண்) யாராவது வழங்க முடிந்தால் நான் அவர்களை பாராட்டுகிறேன்" என்று அவர் இன்று முகநூலில் தெரிவித்தார். பொதுமக்கள் புக்கிட் காசிங் சட்ட மன்ற சேவை மையத்தை 03-2935 9135 என்ற எண்ணிலோ அல்லது வாட்ஸ்அப்பை 016-216 7490 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்," என்று தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார். மே 10 அன்று, மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓத்மான் சாலை சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகள் மே 23 வரை பிகேபிடியின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

பிகேபிடி உத்தரவில் மண்டலம் ஏ, மண்டலம் பி மற்றும் மண்டலம் சி ஆகிய மூன்று பகுதிகளில் சுமார் 2,900 குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்மாயில் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.