RENCANA PILIHAN

செலங்கா: 20,000 வணிக வளாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது; 1.039 வருகையாளர்கள் பயன்படுத்தி உள்ளனர் !!!

13 மே 2020, 7:00 AM
செலங்கா: 20,000 வணிக வளாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது; 1.039 வருகையாளர்கள் பயன்படுத்தி உள்ளனர் !!!

ஷா ஆலம், மே 13:

கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட 'செலங்கா செயலி'  (பாதுகாப்பாக உள்ளே செல்வோம்) பயன்பாடு மே 11 வரை 1.039 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவு செய்தது. கோவிட் -19 நோய்த் தொற்றைக் கண்டறிய நாடு முழுவதும் 21,064 பதிவு செய்யப்பட்ட வளாகங்கள் மூலம் அதன் பயன்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சித்தி மரியா மாமுட் தெரிவித்தார்.

" இந்த முயற்சி தரவு சேகரிப்பு செயல்திறனை மேம்படுத்துவதற்கும், நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், வருகை கைமுறையாக பதிவு செய்யப்பட்டால் தொற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைப்பதற்கும் ஒரு டிஜிட்டல் வளமாக இருக்கும் என்று சிலாங்கூர் நம்புகிறார்," என்று அவர் இன்று மாநில அரசு கட்டிடத்தில் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு  தெரிவித்தார். அடுத்த கட்டமாக, ஒரு வளாகத்திற்குள் நுழையும் நபர்களை எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்வதற்கான தானியங்கி கட்டுப்பாட்டின் அடிப்படைக் கருத்தைப் பயன்படுத்தி மந்திரி  பெசார் பெறுநிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது.

ஒரு மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்து தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வளாகத்தில் கோவிட் -19 வழக்கு இருந்தால் தொடர்பு கண்காணிப்பு செய்ய முடியும். இந்த அமைப்பிற்கான அணுகல் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை, அரசு நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி மன்ற  அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.